< Back
மாநில செய்திகள்
பள்ளிகளில் பொதுத்தேர்வையொட்டிசீரான மின்வினியோகம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பள்ளிகளில் பொதுத்தேர்வையொட்டிசீரான மின்வினியோகம்

தினத்தந்தி
|
15 March 2023 1:29 AM IST

பள்ளிகளில் பொதுத்தேர்வையொட்டி சீரான மின்வினியோகம் செய்ய மேற்பார்வை பொறியாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாளையங்கோட்டை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நெல்லை மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட கிராமப்புற கோட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் பாளையங்கோட்டை தியாகராஜ நகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நெல்லை மேற்பார்வை பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அப்போது மேற்பார்வை பொறியாளர் குருசாமி பேசுகையில், ''பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு தற்போது அரசு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கு சீரான மின் வினியோகம் வழங்குவதற்கும், இயற்கை இடர்பாடு ஏற்பட்டாலும் உடனடியாக மாற்று வழியில் மின் வினியோகம் வழங்குவதற்கும், அவசர நேரத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து வேலை செய்ய வேண்டும்'' என்றார்.

இதில் செயற்பொறியாளர் (கிராமப்புறம்) வெங்கடேஷ் மணி மற்றும் மின் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்