< Back
மாநில செய்திகள்
மெரினா குதிரை சவாரி ஓட்டிகளுக்கு சீருடை-அடையாள அட்டை
சென்னை
மாநில செய்திகள்

மெரினா குதிரை சவாரி ஓட்டிகளுக்கு சீருடை-அடையாள அட்டை

தினத்தந்தி
|
18 July 2022 7:25 AM IST

கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் மெரினா குதிரை சவாரி ஓட்டிகளுக்கு சீருடை-அடையாள அட்டை மயிலாப்பூர் உதவி கமிஷனர் வழங்கினார்.

சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி பிரபலம். சவாரி தொழிலில் 20 குதிரைகள் இருக்கின்றன. பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரும் இடம் என்பதால் குதிரை சவாரி ஓட்டிகளுக்கு சீருடை வழங்கும் யோசனை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மனதில் உதித்துள்ளது.

இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் மயிலாப்பூர் உதவி கமிஷனர் சீனிவாசன் குதிரை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஊழியர்களுக்கு சீருடை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். பின்னர் அவர்களது புகைப்படம், தனிப்பட்ட விவரங்கள் மெரினா போலீஸ் நிலையத்தில் பெறப்பட்டது. அதனடிப்படையில் அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தயார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் குதிரை சவாரி ஓட்டுகளுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டையை உதவி கமிஷனர் சீனிவாசன் நேற்று வழங்கினார். அப்போது அவர், மெரினாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கனிவாக நடந்துக் கொள்ள வேண்டும். சட்டவிரோத செயல்கள் அரங்கேறுவதை அறிந்தால் அது குறித்து போலீசார் கவனத்துக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும்' என்று அறிவுரை வழங்கினார்.

சீருடை, அடையாள அட்டை அணிந்தபடி குதிரை சவாரி ஓட்டிகள் நேற்று கம்பீரமாக மெரினா கடற்கரையில் வலம் வந்தனர்.

மேலும் செய்திகள்