< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்காலால் மக்கள் அவதி
|14 Dec 2022 11:42 PM IST
தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்காலால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
அரியலூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கீரைக்கார தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத நிலையில் தற்போது தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.