< Back
தமிழக செய்திகள்

திருச்சி
தமிழக செய்திகள்
பாதாள சாக்கடை திட்ட பணி-குடிநீர் குழாயில் உடைப்பால் பொதுமக்கள் அவதி

5 Jun 2023 2:22 AM IST
பாதாள சாக்கடை திட்ட பணி-குடிநீர் குழாயில் உடைப்பால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
செம்பட்டு:
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. மேலும் இந்த பணியின்போது திடீரென காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் அதிக அளவில் குடிநீர் வெளியேறி வருகிறது. இதனை சீரமைக்கும் பணியில் போதுமான அலுவலர்கள் இல்லாததால், தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு தீர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.