< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
|25 Oct 2023 11:13 PM IST
ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
கரூர் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஊஞ்சல் உற்வசம் நடைபெற்றது. இதனையொட்டி ரெங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரெங்கநாதர் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சிறப்பு பூஜையுடன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.