< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
ஆரணி ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தல்; ஒருவர் கைது
|27 Aug 2023 4:52 PM IST
ஆரணி ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக பெரியபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையறிந்து நேற்று முன்தினம் இரவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது ஆற்று மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், மாம்பாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரைச்சேர்ந்த மனோகரன் (வயது 48) என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் மனோகரனை கைது செய்து திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.