< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் அனுமதியின்றி போராட்டம்: அதிமுக நிர்வாகிகள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
|22 Dec 2022 10:43 AM IST
சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அதிமுக நிர்வாகிகள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
சென்னையில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வு மற்றும் திமுக அரசை கண்டித்து 33 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் ஒவ்வொரு பகுதியிலும் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடந்ததாக அதிமுக நிர்வாகிகள் மீது, அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் சென்னை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.