< Back
மாநில செய்திகள்
திண்டிவனத்தில் அனுமதி இன்றி வைத்த பட்டாசு கடைக்கு சீல்
விழுப்புரம்
மாநில செய்திகள்

திண்டிவனத்தில் அனுமதி இன்றி வைத்த பட்டாசு கடைக்கு 'சீல்'

தினத்தந்தி
|
14 Oct 2023 12:15 AM IST

திண்டிவனத்தில் அனுமதி இன்றி வைத்த பட்டாசு கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திண்டிவனம்

திண்டிவனம் பகுதியில் உள்ள கடைகளில் அரசு அனுமதி இன்றி பட்டாசு விற்பனை செய்வதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய்த்துறையினர் திண்டிவனம் காந்தி சிலை அருகில் மருத்துவமனை ரோட்டில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் அரசு அனுமதி இன்றி பட்டாசு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர் டோமினிக் சேவியர், கிராம நிர்வாக அலுவலர் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்ததோடு, அந்த கடைக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து பட்டாசு விற்ற கடை உரிமையாளர் சுடலை முத்து மகன் தங்கதுரை (வயது 50) என்பவரை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்