கரூர்
தாய் இறந்த துக்கம் தாங்காமல்: அதிக மாத்திரைகள் தின்று தொழிலாளி தற்கொலை
|கரூர் அருகே தாய் இறந்த துக்கம் தாங்காமல் அதிக மாத்திரைகள் தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி அருகே உள்ள அய்யம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி அமலா (48) என்ற மனைவி உள்ளார்.இந்தநிலையில் ராஜேந்திரனின் தாய் கன்னியம்மாள் கடந்த 11-ந்தேதி உடல்நிைல சரியில்லாமல் இறந்தார். இதனால் கடந்த ஒருவாரமாக ராஜேந்திரன் மனமுடைந்து காணப்பட்டார்.
மாத்திரைகளை தின்றார்
இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜேந்திரன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அமலா, ராஜேந்திரனிடம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு ராஜேந்திரன் நான் 20 மாத்திரைகளை சாப்பிட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அமலா மற்றும் உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சாவு
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து அமலா கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.