< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
உளுந்தூர்பேட்டை: தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து - 15-க்கும் மேற்பட்டோர் காயம்
|19 Feb 2023 4:56 PM IST
உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து, சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விழுப்புரம்,
உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் பகுதியில் சென்னையில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புக் கம்பிகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைத்துள்ளனர். காயமடைந்துள்ள பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.