< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
உளுந்தூர்பேட்டை: கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட 220 லிட்டர் எரிசாராயத்தை தீ வைத்து அழித்த போலீசார்
|20 Jun 2023 10:30 PM IST
உளுந்தூர்பேட்டை ஏரிக்கரையில் 220 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் தீ வைத்து அழித்தனர்.
கள்ளக்குறிச்சி,
புதுச்சேரியில் இருந்து கடந்த ஆண்டு கடத்தி வரப்பட்ட 220 லிட்டர் எரிசாராயத்தை உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோர்ட்டு உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், உளுந்தூர்பேட்டை தீயணைப்பு அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் உளுந்தூர்பேட்டை ஏரிக்கரையில் 220 லிட்டர் எரிசாராயம் தீ வைத்து அழிக்கப்பட்டது.