கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்
|உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோக ஜோதி, முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, உளுந்தூர்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல், நகராட்சி துணை தலைவர் வைத்தியநாதன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் டேனியல்ராஜ், சாரதா ஆசிரமம் அம்பா ஆத்ம விகாசா பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான மணிக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் மாவட்ட கல்வி அலுவலர்(பொறுப்பு) கலைச்செல்வன், நகராட்சி கவுன்சிலர்கள் மாலதி ராமலிங்கம், குமரவேல், முருகவேல், வார்டு செயலாளர் ஐஸ்வர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ் நன்றி கூறினார்.