நீலகிரி மலை ரெயிலை ரூ.3.60 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்த இங்கிலாந்து சுற்றுலா பயணிகள்
|இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்தனர்.
நீலகிரி,
நீலகிரியின் இயற்கை அழகையும், சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து ரசிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்தில் இருந்து வந்த 16 சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்தனர்.
இதற்காக சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி மலை ரெயிலை அவர்கள் வாடகைக்கு எடுத்தனர். அந்த ரெயில் காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு குன்னூர் ரெயில் நிலையத்திற்கு சென்றடைந்தது.
அங்கு மலை ரெயிலின் லோகோ பணிமனையை பார்வையிட்ட அவர்கள், நூற்றாண்டு பழமையான நீராவி இஞ்சின் ரயிலைப் பற்றி கேட்டறிந்தனர். இந்த ரெயில் பயணத்தின் போது நீலகிரி மலையைச் சுற்றியுள்ள அழகிய இயற்கை காட்சிகள், காட்டு விலங்குகளை இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.