< Back
மாநில செய்திகள்
குற்றாலம் மெயின் அருவியில் திடீரென விழுந்த உடும்பு - அலறியடித்து ஓடிய பெண்கள்
மாநில செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் திடீரென விழுந்த உடும்பு - அலறியடித்து ஓடிய பெண்கள்

தினத்தந்தி
|
25 Nov 2022 6:48 PM IST

வனத்துறையினர் உடும்பை பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு விட்டனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவருகின்றனர். இந்நிலையில், இன்று காலையில் மெயின் அருவியில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள உடும்பு விழுந்தது.

தண்ணீருடன் அடித்து வரப்பட்ட உடும்பு, பெண்கள் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு வளைவு மீது விழுந்தது. இதனால் பயந்துபோன பெண்கள் அலறியடித்து வெளியேறினர். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அங்கு சென்று பார்த்து, தீயணைப்பு துறையினருக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி உடும்பை பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்