< Back
மாநில செய்திகள்
பக்கிங்கம் கால்வாயில் கழிவுநீர் கலப்பு - சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆய்வு
மாநில செய்திகள்

பக்கிங்கம் கால்வாயில் கழிவுநீர் கலப்பு - சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆய்வு

தினத்தந்தி
|
26 Oct 2022 4:54 PM GMT

பசுமைவழிச்சாலை, நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

சென்னை பக்கிங்கம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பாக நடுக்குப்பம் பகுதியில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பக்கிங்கம் கால்வாயில் 22 இடங்களில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டது.

இதில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட நொச்சிக்குப்பம், லாக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், கால்வாயின் கரைகளை அழகுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்து பசுமைவழிச்சாலை, நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்