< Back
மாநில செய்திகள்
உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியில்  தங்கும் விடுதிகளில் போலீசார்   திடீர் சோதனை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியில் தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை

தினத்தந்தி
|
5 Nov 2022 12:15 AM IST

உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியில் தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

உடன்குடி:

உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் குலசேகரன் பட்டினம் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். விடுதிகளில் வெளி ஊர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து யாராவது தங்கி இருக்கிறார்களா? எதற்காக வந்திருக்கிறார்கள்? எத்தனை நாட்களாக தங்கியிருக்கின்றனர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் ஆதார் கார்டு உள்பட முறையான ஆவணம் இல்லாமல் யாரையும் தங்க அனுமதிக்க கூடாது. சந்தேகப்படும்படியாக யாராவது தங்கி இருந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கவும் விடுதி உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்