< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்டப்பணிகளை உதயசூரியன் எம்.எல்.ஏ.ஆய்வு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை உதயசூரியன் எம்.எல்.ஏ.ஆய்வு

தினத்தந்தி
|
28 May 2023 12:15 AM IST

கல்வராயன்மலையில் வளர்ச்சி திட்டப்பணிகளை உதயசூரியன் எம்.எல்.ஏ.ஆய்வு மேற்கொண்டார்.

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளிமலை, மேல்பாச்சேரி, தொரடிப்பட்டு, இன்னாடு, வேங்கோடு உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சாலை சீரமைப்பு உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய பொறியாளர் அருண் ராஜா, தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், சின்னத்தம்பி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரத்தினம், செல்வராஜ், ஆண்டி, அண்ணாமலை, அர்ச்சனா, லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்லதுரை, செல்வராஜ், மலர்ராஜ்குமார், மின்னல் கொடிசக்திவேல், பார்வதி அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்