ராமநாதபுரம்
தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்
|பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.
பரமக்குடி,
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 66-வது நினைவு நாள் இன்று(திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் சார்பிலும், ஊர் மக்கள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற -சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கயல்விழி உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி.டி.வி. தினகரன் தலைமையில் நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். இந்திய தேசிய காங்கிரஸ், ம.தி.மு.க. பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தே.மு.தி.க, பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், சமுதாய அமைப்பினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.