< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆவதற்கான எல்லா தகுதிகளும் உள்ளன- கே.எஸ்.அழகிரி
|28 Nov 2022 10:52 AM IST
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆவதற்கான எல்லா தகுதிகளும் உள்ளன என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை,
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று சொந்த கட்சியினர் வற்புறுத்தி வரும் நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரசும் இதை ஆதரித்துள்ளது. இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலின் தாராளமாக அமைச்சராக வரலாம். கட்சியின் தலைவர் மற்றும் கட்சியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர் தாராளமாக அமைச்சராக வரலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி.
கட்சியின் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளார். அமைச்சர் ஆவதற்கான முழுத்தகுதியும் அவருக்கு இருக்கிறது. ஆனால் அமைச்சர் ஆவதற்கு அவர் விருப்பப்பட வேண்டும். கட்சியினர் விரும்புகிறார்கள். இனி அவர் விரும்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.