விருதுநகர்
மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள்
|விருதுநகரில் 57 மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்
விருதுநகரில் 57 மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்
நலத்திட்ட உதவி
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் விருதுநகரிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் 57 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.83,500 மதிப்பிலான ரூ.47 லட்சத்து 59 ஆயிரத்து 500 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனங்களை வழங்கினர்.
முதல்-அமைச்சருக்கு நன்றி
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி எம்.பி. தனுஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகரசபை தலைவர் மாதவன், வத்திராயிருப்பு யூனியன் தலைவர் சிந்து முருகன், சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.