< Back
மாநில செய்திகள்
இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது

தினத்தந்தி
|
1 March 2023 12:39 AM IST

இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:

போலீசார் விசாரணை

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் ஆலோசனைக்கிணங்க ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஜெயங்கொண்டம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர்.

கைது

இதில், அவர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மேலமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(வயது 43) என்பதும், ஜெயங்கொண்டம் மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 21 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ராஜ்குமாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்