< Back
மாநில செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி
அரியலூர்
மாநில செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி

தினத்தந்தி
|
3 Sept 2023 12:06 AM IST

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் வாகன பேரணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது மத்திய அரசு சமையல் கியாஸ் விலையை உயர்த்தி விட்டு, தற்போது தேர்தலுக்காக அதன் விலையை குறைத்துள்ளதாக பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனர். வாகன பேரணியில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அணைக்குடத்தில் தொடங்கிய இருசக்கர வாகன பேரணி, சிலால், தேவாமங்கலம், உதயநத்தம் வழியாக தா.பழூரில் நிறைவடைந்தது.

மேலும் செய்திகள்