தர்மபுரி
பெங்களூர் - ஓசூர் இடையே இருவழிப்பாதை பணி தீவிரம்
|பெங்களூரு- ஓசூர் இடையே இருவழி பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதால் 4 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
இருவழிப்பாதை
பெங்களூரு - ஓசூர் இடையே உள்ள கார்மெலாரம்- ஹீலாலிகே ரெயில் நிலையங்களுக்கு இடையில் இரு வழிப்பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி தர்மபுரி வழியாக இயக்கப்படும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூரு - காரைக்கால் தினசரி ரெயில் (வண்டி எண் 16529) இன்று (திங்கட்கிழமை) மையப்பனஹல்லி, பங்காரு பேட்டை, திருப்பத்தூர், சேலம் வழியாக செல்லும், இந்த ரெயில் பெலாந்தூர், ஹீலாலிகே, ஆனேக்கல் ரோடு, ஓசூர், கெலமங்கலம், ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தர்மபுரி, சிவாடி, முத்தம்பட்டி, தோப்பூர், காருவள்ளி,ஓமலூர் வழியாக செல்லாது.
காரைக்கால் ரெயில்
இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் காரைக்கால் - பெங்களூரு தினசரி ரெயில் (16530) இன்று (திங்கட்கிழமை) காரைக்கால் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சேலம், திருப்பத்தூர், பங்காரு பேட்டை, பையப்பனஹள்ளி வழியாக செல்லும். இந்த ரெயில் ஓமலூர், தர்மபுரி, பாலக்கோடு ஓசூர், கார்மெலாரம், ஹீலாலிகே வழியாக செல்லாது. மேலும் பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (திங்கட்கிழமை) பெங்களூருவில் இருந்து புறப்பட்டு பெங்களூரு கண்டோன்மென்ட், பையப்பன அள்ளி, பங்காரு பேட்டை, திருப்பத்தூர், சேலம் வழியாக இயக்கப்படும், இந்த ரெயில் கார்மெலாரம், ஓசூர், தர்மபுரி வழியாக செல்லாது.
இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் எர்ணாகுளம் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12678) இன்று திங்கட்கிழமை) எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு சேலம், திருப்பத்தூர், பங்காரு பேட்டை, பையப்பனஅள்ளி, பெங்களூரு கண்டோன்மென்ட் வழியாக செல்லும், இந்த ரெயில் தர்மபுரி, ஓசூர், கார்மெலாரம் வழியாக செல்லாது என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.