< Back
மாநில செய்திகள்
நாமக்கல் அரசு பள்ளியில் இரு மாணவர்கள் மோதல் - ஒருவர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

நாமக்கல் அரசு பள்ளியில் இரு மாணவர்கள் மோதல் - ஒருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
23 Aug 2024 8:24 PM IST

நாமக்கல் அரசு பள்ளியில் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகே அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் நவலடிபட்டியைச் சேர்ந்த ஆகாஷ்(16) என்ற மாணவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவரின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே எதனால் மோதல் ஏற்பட்டது என்பது குறித்து எருமபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்