< Back
மாநில செய்திகள்
கோவையில் 2 பி.எப்.ஐ. அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு
மாநில செய்திகள்

கோவையில் 2 பி.எப்.ஐ. அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

தினத்தந்தி
|
14 Oct 2022 8:31 PM IST

உக்கடம் வின்செண்ட் சாலையில் உள்ள 2 பி.எப்.ஐ. அலுவலகங்களுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

கோவை,

நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பி.எப்.ஐ. மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், 5 ஆண்டுகள் தடை விதித்தது.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பி.எப்.ஐ. மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்த அலுவலகங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டம் உக்கடம் வின்செண்ட் சாலையில் உள்ள 2 பி.எப்.ஐ. அலுவலகங்களுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்