< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிவகங்கை அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
|21 Sept 2024 9:03 PM IST
சிவகங்கை அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் செப்டிக் டேங்க் அமைக்க குழி தோண்டும்போது விஷவாயு தாக்கி ராமையா (50), பாஸ்கரன் (50) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
முன்னதாக 25 அடி ஆழத்தில் குழி தோண்டிக்கொண்டிருக்கும்போது விஷவாயு தாக்கி மயக்கமடைந்தனர். இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.