< Back
மாநில செய்திகள்
டென்னிஸ் போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த இரட்டையர்கள் சாதனை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

டென்னிஸ் போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த இரட்டையர்கள் சாதனை

தினத்தந்தி
|
4 Sept 2022 11:57 PM IST

டென்னிஸ் போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த இரட்டையர்கள் சாதனை படைத்துள்ளனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 30-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவிலான மருத்துவ கல்லூரிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டி ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் நடந்தது. இதில் பெரம்பலூர் ராஜா நகரை சேர்ந்த செல்லப்பிள்ளை-பிரபா தம்பதியின் இரட்டை மகன்களும், சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருபவர்களுமான விஜய், சூர்யா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் விஜய் முதலிடமும், சூர்யா 2-ம் இடமும் பிடித்தனர். இரட்டையர் பிரிவில் அவர்கள் 2 பேரும் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் 2024-ம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சி எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்