< Back
மாநில செய்திகள்
நூதன முறையில் லாட்டரி சீட்டு விற்ற 24 பேர் சிக்கினர்
சேலம்
மாநில செய்திகள்

நூதன முறையில் லாட்டரி சீட்டு விற்ற 24 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
30 Jun 2022 1:27 AM IST

சேலத்தில் நூதன முறையில் லாட்டரி சீட்டு விற்ற 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தில் நூதன முறையில் லாட்டரி சீட்டு விற்ற 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

லாட்டரி சீட்டு விற்பனை

தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகரில் உள்ள டீக்கடை, மளிகைக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் லாாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடாவுக்கு புகார்கள் வந்தன.

அவரது உத்தரவின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டனர். தனிப்படை போலீசார் தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சீலநாயக்கன்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.

24 பேர் கைது

அதாவது லாட்டரி சீட்டுக்களின் எண்ணை மட்டும் ஒரு பேப்பரில் எழுதி கொடுத்து, அந்த எண் இந்த மாநிலத்தை சேர்ந்த லாட்டரி சீட்டுக்கானது. பரிசு விழுந்தால் இந்த எண் எழுதிய பேப்பரை காண்பித்து பரிசு வாங்கிக்கொள்ளலாம் என்று கூறி பொதுமக்களிடம் நூதன முறையில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த பெரியசாமி (வயது 42), கைலாஷ் (40), சித்தேஸ்வரன் (41), கருப்பண்ணன் (35) உள்ளிட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்