< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
த.வெ.க. தலைவர் விஜய்க்கு அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் - சீமான்
|8 Sept 2024 7:11 PM IST
விஜய்யின் த.வெ.க. கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், என் ஆருயிர் இளவல், அன்புத்தளபதி விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தமையை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிற செய்தியறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும், அதன் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கும், ஏனைய நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.