< Back
மாநில செய்திகள்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து
மாநில செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து

தினத்தந்தி
|
26 March 2024 7:07 AM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இன்று தொடங்கி, வருகிற ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. முதல் நாளான இன்று, தமிழ் மற்றும் இதர மொழிப்பாட தேர்வுகள் நடக்க இருக்கிறது. அதே போல் புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு இன்று தொடங்குகிறது.

இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்