< Back
மாநில செய்திகள்
மின்தடையால் பழுதடையும் டி.வி.க்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மின்தடையால் பழுதடையும் டி.வி.க்கள்

தினத்தந்தி
|
14 Jun 2023 8:14 PM IST

பழனி பகுதியில் மின்தடையால் டி.வி.க்கள் பழுதடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

பழனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. இதனால் மின்வயர்கள் உரசி அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஊரக பகுதிகளான சிவகிரிப்பட்டி, மருத்துவர் நகர், மயிலாடும்பாறை, சிவசக்தநகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நேற்றும் மயிலாடும்பாறை, சிவசக்திநகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மின்தடை காரணமாக அந்த பகுதியில் 20 வீடுகளில் டி.வி.க்கள் பழுதடைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஊரக பகுதிகளில் ஏற்படும் மின்தடை காரணமாக டி.வி., குளிர்சாதனபெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகிறது. எனவே மின்தடையை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, காற்று வீசுவதால் மின்வயர்கள் உரசி மின்தடை ஏற்படுவது வழக்கம். ஆனால் அடிக்கடி நடந்தால் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்றனர்.

மேலும் செய்திகள்