< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
தூத்துக்குடி ஆசிரியர் காலனியில்புதிய குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்க கோரிக்கை மனு
|28 Jun 2023 12:15 AM IST
தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் புதிய குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்க மேயரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி 34-வது வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கொடுத்த மனுவில், எனது வார்டுக்கு உட்பட்ட ஆசிரியர் காலனி பகுதியில் தார்சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் அந்த பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் தார்சாலை அமைப்பதற்கு முன்பு புதிதாக போடப்பட்டு உள்ள கருப்பு நிற குடிநீர் குழாயில் தண்ணீர் விட்டு சரிபார்த்தால் கழிவுநீர் வருவதை தடுக்க முடியும். அதே போன்று வீடு வரை புதிய குழாய் இணைப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. ஆகையால் புதிய குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.