< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் காலதாமதம் செய்யாமல் தீபாவளி போனஸ் வழங்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் காலதாமதம் செய்யாமல் தீபாவளி போனஸ் வழங்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி
|
12 Oct 2023 12:15 AM IST

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் காலதாமதம் செய்யாமல் தீபாவளி போனஸ் வழங்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் காலதாமதம் செய்யாமல் தீபாவளி போனஸ் வழங்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு என்.டி.பி.எல். அனல் மின் நிலைய கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டல செயலாளர் அப்பா துரை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆர்.ரசல் கண்டன உரையாற்றினார்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில், ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட அலவன்ஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், 2021 ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்கப்பட வேண்டிய பஞ்சப்படி வழங்காமல் உள்ள பிரிவுகளுக்கு உடனே வழங்க வேண்டும், மருத்துவ பரிசோதனையை நிர்வாகம் ஏற்று நடத்த வேண்டும், காலம் தாழ்த்தாமல் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், குறைதீர்ப்பு கமிட்டியில் தெரிவிக்கப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், பெயரளவுக்கு கமிட்டியை நடத்தக்கூடாது, கழிவறை, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் என்.டி.பி.எல். அனல் மின் நிலைய கிளைத் தலைவர் கணபதி சுரேஷ், சி.ஐ.டி.யு மாவட்ட துணைத் தலைவர் ரவித் தாகூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்