< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
தூத்துக்குடி மடத்தூர் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா
|4 July 2023 12:15 AM IST
தூத்துக்குடி மடத்தூர் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
தூத்துக்குடி மடத்தூர் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்து வருகின்றன. இந்த விழா நாளை(புதன்கிழமை) வரை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து உள்ளனர்.