சென்னை
சுரங்கப்பாதை அமைக்கும் பணி: வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் போக்குவரத்து மாற்றம் - நாளை முதல் அமல்
|சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜா நகர் வரையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி இப்பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* கண்ணன் ரவுண்டானாவில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் கண்ணன் தெரு வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
* கண்ணன் ரவுண்டானாவில் இருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும் இரு சக்கர வாகனங்கள் பரசுராமன் தெரு - தர்மராஜா கோவில் தெற்குப் பாதை வழியாக கண்ணன் சாலையை சென்றடையலாம்.
* கண்ணன் ரவுண்டானாவில் இருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும் இலகுரக மோட்டார் வாகனங்கள் திருவெற்றியூர் சாலை - எம்.எஸ். நாயுடு தெரு சின்ன முனுசாமி தெரு வழியாக கண்ணன் சாலையை அடையலாம்.
* போஜராஜா நகர் செல்ல விரும்பும் கனரக வாகனங்கள் சிபி ரோடு - கொருக்குப்பேட்டை ரெயில்வே கேட் - கண்ணன் தெரு - போஜராஜா நகர் ரெயில்வே கேட் வழியாக போஜராஜா நகரை அடையலாம்.
* கண்ணன் தெருவில் இருந்து கண்ணன் ரவுண்டானா வழியாக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
* கண்ணன் தெருவில் இருந்து கண்ணன் ரவுண்டானாவுக்குச் செல்ல விரும்பும் வாகனங்கள் சின்ன முனுசாமி தெரு - எம்.எஸ். நாயுடு தெரு - சாலை வழியாக கண்ணன் ரவுண்டானாவை அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.