< Back
மாநில செய்திகள்
காசநோய் கண்டறிதல் முகாம்
கரூர்
மாநில செய்திகள்

காசநோய் கண்டறிதல் முகாம்

தினத்தந்தி
|
15 Oct 2023 11:29 PM IST

காசநோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

புகழிமலை அடிவாரத்தில் உள்ள காந்தி மண்டபத்தில் சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு காசநோய் கண்டறிதல் குறித்த எக்ஸ்ரே நெஞ்சு பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு காசநோய், நெஞ்சு சளி, இருமல் உள்ளதா? என்று எக்ஸ்ரே மூலம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. பின்னர் காசநோய் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்