< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
த.வெ.க. தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டி.டி.வி. தினகரன்
|22 Jun 2024 10:05 AM IST
த.வெ.க. தலைவர் விஜய்க்கு,அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி,. தினகரன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்,விஜய்க்கு,அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி,. தினகரன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டி.டி.வி,. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
.தமிழ்த் திரையுலக முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு.விஜய் அவர்கள் பூரண உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.