< Back
மாநில செய்திகள்
ஆசிய சாம்பியன்ஷிப் வாள் வீச்சுப் போட்டியில் பதக்கம் வென்ற பவானி தேவிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
மாநில செய்திகள்

ஆசிய சாம்பியன்ஷிப் வாள் வீச்சுப் போட்டியில் பதக்கம் வென்ற பவானி தேவிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

தினத்தந்தி
|
19 Jun 2023 1:35 PM GMT

ஆசிய சாம்பியன்ஷிப் வாள் வீச்சுப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பவானி தேவிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் வாள் வீச்சுப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் வாள் வீச்சுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி வெண்கல பதக்கம் வென்று சாதனை புரிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டின் பெருமையை நிலை நாட்டும் வகையில் பதக்கம் வென்ற பவானி தேவிக்கும், அவருக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் பெற்றோர், பயிற்சியாளர் ஆகியோருக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கின்றேன்.

வரும் காலங்களில் மேலும் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு புகழ் தேடித்தர வேண்டும் என பவானி தேவியை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகின்றேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்