< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயற்சி
|5 March 2023 1:45 AM IST
நெல்லை அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற சம்பவம் நடந்தது.
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் பகுதியைச் சேர்ந்த கணபதி என்ற 80 வயது மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துள்ளனர். மூதாட்டி சங்கிலியை பிடித்துக் கொண்டு, ஏலே பித்தளை, ஏலே பித்தளை என கத்தி உள்ளார். இதையடுத்து பறித்த சங்கிலியை மர்மநபர்கள் விட்டுச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் தனக்கு நேர்ந்த சம்பவத்தை சக மக்களிடம் உள்ளூர் வட்டார மொழியில் விளக்கும் கணபதியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.