< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் 40 ஆயிரம் கோயில்களுக்கு ஓராண்டுக்குள் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்: அமைச்சர் சேகர்பாபு
|5 March 2023 12:49 PM IST
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கோயில்களில் இருந்து சிலைகள் எதுவும் கடத்தப்படவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
குமரி,
கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, தமிழ்நாட்டில் 40 ஆயிரம் கோயில்களுக்கு ஓராண்டுக்குள் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கோயில்களில் இருந்து சிலைகள் எதுவும் கடத்தப்படவில்லை என்றும், தமிழ்நாட்டில் 2.400 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.