< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
அனுமதியின்றி மணல் அள்ளிய லாரிகள் பறிமுதல்
|19 May 2023 12:40 AM IST
அனுமதியின்றி மணல் அள்ளிய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி ரோட்டில் கேரளா பதிவு எண் கொண்ட டிப்பர் லாரிகளில் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பெயரில் தாசில்தார் ரங்கசாமி தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும், கேரளா பதிவு எண் லாரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரிகளை பறிமுதல் செய்து வன்னியம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக டிரைவர்கள் பாஸ்கர் (வயது35), காசி பெருமாள் (40) ஆகிய 2 பேரையும் வன்னியம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.