< Back
மாநில செய்திகள்
காற்றாலை இறக்கைகளை கொண்டு சென்ற லாரிகள்
கரூர்
மாநில செய்திகள்

காற்றாலை இறக்கைகளை கொண்டு சென்ற லாரிகள்

தினத்தந்தி
|
23 March 2023 12:25 AM IST

நீளமான காற்றாலை இறக்கைகளை கொண்டு சென்ற லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக மதுரைக்கு 5 லாரிகளில் அதிக நீளமான காற்றாலை இறக்கைகளை ஏற்றி கொண்டு மதுரைக்கு சென்று கொண்டிடருந்தது. தற்போது சாலையில் தார் போடாமல் ஜல்லி போட்டு இருப்பதால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் 5 லாரிகளும் தடுமாறி சென்றன. அந்த லாரிகள் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலம் பாலத்தில் சென்றபோது ஒன்றன்பின் ஒன்றாக திரும்ப முடியாமல் நின்றது. இதனால் அந்த சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்