வரி உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தம்!
|லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேங்கும் அபாயம் உள்ளது.
நாமக்கல்,
தமிழகத்தில் லாரிகளுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று (வியாழக்கிழமை) அடையாள வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 6 லட்சம் லாரிகள், 25 லட்சம் இலகுரக வாகனங்கள் ஓடாது என சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேங்கும் அபாயம் உள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவிப்பதாக மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி கூறியுள்ளார். தமிழகம் முழுவதும், 55 ஆயிரம் மணல் லாரிகள் இயங்காது என்றும் அவர் கூறினார்.