< Back
மாநில செய்திகள்
நல்லம்பள்ளி அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் படுகாயம்
மாநில செய்திகள்

நல்லம்பள்ளி அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் படுகாயம்

தினத்தந்தி
|
17 Jun 2022 3:31 PM IST

நல்லம்பள்ளி அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

நல்லம்பள்ளி,

சேலத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு மாட்டு தீவன பாரம் ஏற்றிக் கொண்டு இன்று காலை லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.லாரியை தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த அமித்(வயது 38) என்பவர் ஓட்டி வந்தார்.

லாரி சேசம்பட்டி பிரிவு சாலையில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் லாரியினுள் சிக்கி படுகாயம் அடைந்தார். அவ்வழியாக வந்தவர்கள் இது குறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் சுங்க சாவடி ரோந்து படையினர் இணைந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த விபத்தால் சேசம்பட்டி-நல்லம்பள்ளி இடையே ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்