< Back
மாநில செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் லாரி கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் லாரி கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்

தினத்தந்தி
|
28 Sept 2022 2:07 PM IST

ஊத்துக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி கிருஷ்ணா கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து பெங்களூருவை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. லாரியை டிரைவர் கார்த்திக் ராஜன் (வயது 23) என்பவர் ஓட்டினார். இந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள அம்பேத்கர்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி அங்குள்ள கிருஷ்ணா நதி கால்வாய் பாலத்தின் தடுப்பு சுவற்றில் மோதி கால்வாயில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் கார்த்திக்ராஜன் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கிருஷ்ணா நதி கால்வாயில் சீரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நீர்வரத்து இன்றி கால்வாய் வெறிச்சோடிக் கிடக்கிறது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்