< Back
மாநில செய்திகள்
வால்பாறை அருகே 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் படுகாயம்
மாநில செய்திகள்

வால்பாறை அருகே 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் படுகாயம்

தினத்தந்தி
|
17 Jun 2022 3:10 PM IST

வால்பாறை அருகே 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்து உள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை கக்கன்காலனி பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் குரியன்(வயது 72). இவர் கேரள மாநிலம் கொச்சின், சாலக்குடி, வால்பாறை பகுதிக்கும் பல ஆண்டுகளாக லாரி இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சாலக்குடி பகுதியில் இருந்து வால்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு விறகு ஏற்றி வந்துள்ளார்.

லாரி வால்பாறை-சாலக்குடி சாலையில் புலியல்பாறை என்ற இடத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த சிறிய தடுப்பு உடைந்து லாரி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரிக்குள் சிக்கி இருந்த டிரைவர் குரியனை அப்பகுதியினர் மீட்டு சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்