< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டி அருகே    லாரி கவிழ்ந்து விபத்து; 2 பேர் படுகாயம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி அருகே லாரி கவிழ்ந்து விபத்து; 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
14 Dec 2022 12:15 AM IST

விக்கிரவாண்டி அருகே லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயமடைந்தனா்.


விக்கிரவாண்டி,

செஞ்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி சிமெண்டு லோடு ஏற்றிக் கொண்டு நேற்று காலை லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை ஏமப்பூரை சேர்ந்த சங்கர் (வயது 38) என்பவர் ஓட்டி சென்றார். இவருடன் கண்டமானடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (45) என்பவரும் வந்தார். லாரி, விக்கிரவாண்டி அருகே நந்திவாடி கூட்ரோடு அருகே வரும் போது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் டிரைவர் சங்கர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த சிமெண்டு மூட்டைகள் மாற்றுலாரியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.

விபத்து குறித்து கஞ்சனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்