< Back
மாநில செய்திகள்
லாரி கவிழ்ந்து விபத்து
தென்காசி
மாநில செய்திகள்

லாரி கவிழ்ந்து விபத்து

தினத்தந்தி
|
17 July 2022 11:09 PM IST

பாவூர்சத்திரம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

பாவூர்சத்திரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ரப்பர் சீட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நெல்லை நோக்கி வந்தது. இந்த லாரியை விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியை சேர்ந்த பால்ராஜ் மகன் டிரைவர் தர்மன் (வயது 28) ஓட்டி வந்தார். நெல்லை-தென்காசி சாலையில் பாவூர்சத்திரம் அடுத்துள்ள நவநீதகிருஷ்ணபுரம் அருகே ரோட்டின் வடபுறம் நான்கு வழிச்சாலைக்காக ஜல்லியால் போடப்பட்ட ரோட்டில் லாரியை நிறுத்தியுள்ளார். பின்னர் நேற்று இரவு அங்கிருந்து தார்சாலைக்கு லாரியை திருப்ப முயன்றபோது லாரி சாலையில் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் தர்மன் காயமின்றி தப்பினார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, கிருஷ்ணன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லாரி கவிழ்ந்த இடத்தில் தென்புறம் சாலை விரிவாக இருந்ததனால் போக்குவரத்து பாதிப்பின்றி வாகனங்கள் சென்று வந்தன.

மேலும் செய்திகள்