கன்னியாகுமரி
பூதப்பாண்டி அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் பலி
|பூதப்பாண்டி அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் ேமாதிய விபத்தில் மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் ேமாதிய விபத்தில் மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவர்
பூதப்பாண்டி அருகே உள்ள ஈசாந்திமங்கலத்தை அடுத்த நாவல்காடு தெற்குதெருவை சேர்ந்தவர் முருகன், கொத்தனார். இவருடைய மகன் கணேஷ் (வயது 19). இவர் ஒரு கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நாவல்காடு ஜவகர் தெருவை சேர்ந்த குமார் மகன் அபிஷேக் (19). இவர்கள் இருவரும் நண்பர்கள். அபிஷேக் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நண்பர்கள் இருவரும் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் துவரங்காடு பகுதியில் இருந்து நாவல்காடு பகுதிக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கணேஷ் ஓட்டினார். அபிஷேக் பின்னால் அமர்ந்திருந்தார்.
லாரி மோதி சாவு
ஈசாந்திமங்கலத்தை கடந்து மாங்குளம் பகுதியில் சென்ற போது எதிரே ஒரு லாரி வந்தது. இந்தநிலையில் எதிர்பாராத விதமாக லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன்றி கணேஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அபிஷேக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.