< Back
மாநில செய்திகள்
லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி

தினத்தந்தி
|
28 May 2023 3:01 PM IST

ஊத்துக்கோட்டை அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் ஊராட்சியை சேர்ந்த ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர்கள் செஞ்சய்யா (வயது 40), சின்னத்தம்பி (35). சுமை தூக்கும் தொழிலாளிகள்.

இவர்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். எல்லம்பேட்டையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதில் செஞ்சய்யா, சின்னத்தம்பி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கம் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செஞ்சய்யா பலியானார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்